ஒரு வாட்டி முடிவு பண்ணா தன் பேச்சை தானே கேட்காத ‘சண்டை’ கோலி…!

Image result for virat kohli

இந்திய கிரிக்கெட் அணிக்கு பட்டோடி, அஜித் வடேகர், கபில் தேவ், முகமது அசாருதின் என எத்தனையோ கேப்டன்கள் கடந்து சென்ற போதும், இந்திய அணி இதுவரை தற்போதைய கேப்டன் விராட் கோலி போல ஒரு ஆக்ரோஷமான கேப்டனை சந்தித்ததில்லை.

திருத்தி எழுதிய தாதா…
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை பெரிய அளவில் மாற்றிய பெருமை தற்போதைய பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள சவுரவ் கங்குலிக்கு உள்ளது. பல இளம் திறமையான வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த சீனியர்களை வழி நடத்திய பெருமை கங்குலியையே சேரும்.

Image result for virat kohli

உள்ளூரில் புலி… வெளியூரில் எலி…
அடுத்து வந்த கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி எட்டாத உயரமில்லை எனலாம். ஆனால் அனைத்தும் உள்ளூரில் பெரிய சாதனைகளாகவே அமைந்தது. ஆனால் தோனி தலைமையில் உள்ளூரில் புலியாக சீறிப்பாய்ந்த இந்திய அணி, அந்நிய மண்ணில் எலியாக சுருண்டது.

ஆக்ரோஷ வீரர்….
அதன் பின் தற்போதைய கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி இதுவரை செய்யாத பல சரித்திரங்களை அந்நிய மண்ணில் படைத்து வருகிறது. ஆஸி மண்ணில் வெற்றி, தென் ஆப்ரிக்க மண்ணில் வெற்றி என அடுத்ததடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது.

Image result for virat kohli

பெரும் குற்றமா?
ஆனால் இப்படி பல சாதனைகளை கோலி செய்து அசத்தினாலும். கோலி களத்தில் அதிக ஆக்ரோஷமாக செயல்படுவது ஒரு குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவதில் என்ன தவறு உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

இதுவும் காரணம்
உண்மையில் இந்திய அணி இதுபோன்ற சரித்திர வெற்றிகளை பெற்றதில் கேப்டனாக கோலியின் ஆக்ரோஷம் காரணமாகவே பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் களத்தில் மிகவும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் என்றால் ஆஸ்திரேலியர்கள் தான். வாய்த்தகராறு இழுத்து எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதில் கில்லாடி கிட்டு அவர்கள்.

Image result for virat kohli

பாதி ஆஸ்திரேலியர்
கோலியின் ஆக்ரோஷம் ஆஸ்திரேலியர்களைப் போல சீண்டலாக இல்லாமல் தன்னை சீண்டியவர்களை, திருப்பி நாசம் பண்ணும் ஆக்ரோஷ குணம் கொண்டவர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பலமுறை பதிலடி கொடுத்துள்ளார் கோலி. கோலி இந்தியராக பிறந்தாலும், ஆக்ரோஷத்தில் பாதி ஆஸ்திரேலியராகவே பார்க்கப்படுகிறார்.

முடிவு முக்கியம்
ஒருவேளை கோலி இந்தியராக பிறக்காமல், ஆஸ்திரேலியராக பிறந்திருந்தால், அவரின் ஆக்ரோஷ குணத்தை அனைவரும் இரு கரங்கள் நீட்டி வரவேற்ப்பார்கள். பொதுவாக மந்தமான டெஸ்ட் போட்டிகளில் எல்லா கேப்டன்களும் எடுக்க தயங்கும் ரிஸ்க்கை கோலி துணிந்து எடுக்கும் அவரின் அசாத்திய தைரியம் தான் இன்று இந்திய அணியின் வெற்றிக் கேப்டன்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது எனலாம்.

கவலையில்லை…
கோலியின் முதல் இலக்கே, வெற்றிக்காக துணிந்து போராடும் போது, அதற்காக தோல்வியை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்ற அவரின் எண்ணம் தான். இந்த எண்ணம் அவரின் பிறவி குணமாகவே உள்ளதால் தான் அவர் இவ்வளவு பெரிய சாதனைகளை சாத்தியமாக்க உதவியுள்ளது.

தப்பேயில்லை…
ஒருமுறை கோலி ஆக்ரோஷமாக செயல்படுவது குறித்து ஜாம்பவான் திராவிட் இடம் கேட்ட போது, ‘கோலி இப்படி ஆக்ரோஷமாக இருப்பதில் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அப்படி ஆக்ரோஷமாக செயல்படுவது தான் அவருக்குள் இருக்கும் சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவுகிறது என்றால் அதில் தப்பேயில்லை. ’ என்கிறார் திராவிட்.

திறமை தான் முக்கியம்
ஒருவேளை கோலி போல உடல் முழுதும் டாட்டூக்களை போட்டுக்கொண்டு, ஆக்ரோஷமாக செயல்பட்டால் எனது திறமை வெளிப்படுமா என்றால், சத்தியமாக கிடையாது. ஆனால் பொதுவாக விளையாட்டு என்பது ஒரு வீரரின் திறமையை கொண்டு தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர, அவரின் தனிப்பட்ட குணத்தை கொண்டு அல்ல.’ என்றார்.

வாய்ப்பேச்சு மட்டுமல்ல….
கோலியின் ஆக்ரோஷம் என்பது வெறும் வாய்ப்பேச்சு, உடல் மொழியில் மட்டுமில்லாமல், ஆட்ட வியூகங்களுமே அது வெளிப்படையாக தெரிகிறது. உதாரணமாக, ஒரு பேட்ஸ்மேனை குறைத்து, ஐந்து பவுலர்கள் வைத்து ஆடும் வியூகம், இக்கட்டான நிலையில் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டு எடுப்பது, போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிரடியாக டிக்ளேர் செய்து ரிஸ்க் எடுப்பது என கோலியின் ஆக்ரோஷம் பல விதங்களில் வெளிப்படுகிறது.

திராவிட் சொன்னது போல
கோலி ஆக்ரோஷமாக செயல்படுகிறார் என்பதற்காக அவர் சிறந்த வீரர், சிறந்த கேப்டன் என்பதை தீர்மானிக்க முடியாது. திராவிட் குறிப்பிட்டது போல இந்திய அணியின் கேப்டன்களாக இருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான குணம் இதுவரை இருந்ததில்லை. அதனால் முந்தைய கேப்டன்களுடன் கோலி ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். எது எப்படியாக இருந்தாலும், கோலியின் ஆக்ரோஷத்தால் எதிரணிக்கு அவர் சிம்ம சொப்பனமாக திகழ்வதோடு, அவரின் தாறு மாறு துணிச்சலால் இதுவரை வெற்றி வாகையை மட்டுமே சூடிவருகிறார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *