பக்கத்துவீட்டுக்காரர் செய்த செயல்..வாசலில் உட்கார்ந்து தலைவாரிய பெண்ணுக்கு நடந்த..

தேனி மாவட்டம், லட்சுமிபுரம் அருகே சருத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி கிருஷ்ணவேனி. இவர்கள் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரனுக்கும், எப்போதும் ஆகாதாம். எதாவது சொல்லி சண்டை ஆரம்பித்துவிடுவாராம். இப்படிதான் சம்பவத்தன்று கிருஷ்ணவேனி அவரின் வீட்டு வெளியில் உட்கார்ந்து தலையை வாரிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து விட்டுக்காரர் சந்திரன் வெளியேபோக கிளம்பி வந்துள்ளார்.

எப்போதும் சகுனம் பார்க்கும் சந்திரன் அந்தபெண்ணை கண்டதும், நான் இப்படி வெளியே செல்லும் நேரத்துல தான் தலையை விரிச்சு சீவணுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு, அந்த பெண் என் வீட்டு வாசலில், என் தலையை சீவுனா உங்களுக்கு என்ன என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன்,  கிருஷ்ணவேனியை தரக்குறைவாக பேசியது மட்டுமில்லாமல், தாக்கியுள்ளார். மேலும், கையை பிடித்து தரதரவென இழுத்து போட்டு தாக்க ஆரம்பித்துவிட்டார். அக்கம் பக்கம் வீட்டினர் திரண்டு வந்துவிட்டனர். சந்திரனை கடுமையாக எச்சரிக்க ஆரம்பித்ததும், அவர்களிடம் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து விருட்டென கிளம்பி போய்விட்டார்.    அதைத்தொடர்ந்து கிருஷ்ணவேணி உடனே தன் கணவனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி அழுதுள்ளார். அதன் பின்னர் கிருஷ்ணவேணி, சந்திரன் , அவமான படுத்தியது எல்லாம் நினைத்து அவமானம் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துகொண்டுள்ளார்.  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, சந்திரனை கைது செய்தனர். மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா என்றும், தான் வீட்டு வாசலில் தலை சீவிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு நபர் தாக்கியதாலும், அதனால் ஏற்பட்ட விபரீதத்தையும் நினைத்து அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *