யம்மா..சத்தியமா நான் உங்கள சொல்லல!பகிரங்கமாக அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட..!

Farokh

இந்திய அணியின் கேப்டனான கோலியுடன் அவர் மனைவி அனுஷ்கா சர்மா எந்த வெளிநாட்டு தொடராக இருந்தாலும் அவருடன் செல்வது வழக்கம் இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேர்வாளர்களின் ஒருவர் தேனீர் கொடுத்து உபசரித்தார் என்ற சர்ச்சை கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் நேற்று தெரிவித்தார்.

anushka

மேலும் அவர் தேர்வு குழுவினர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்து அனுஷ்கா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எனக்கு யாரும் தேனீர் வழங்கவில்லை என்றும் உலக கோப்பை தொடரில் தேர்வாளர்கள் அறை தனியாக இருந்தது அதனை நான் பார்க்கவில்லை என்றும் உங்கள் சர்ச்சையில் தேவையில்லாமல் எனது பெயரை எடுக்க வேண்டாம் என்றும் அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் அனுஷ்கா கூறியிருந்தார்.இந்நிலையில் தனது கருத்துக்கு தற்போது பரூக் இன்ஜினியர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறும்போது : இந்த சம்பவத்தில் அனுஷ்கா சர்மாவை நான் எதுவும் சொல்லவில்லை அவர் சிறந்த பெண்மணி நான் நகைச்சுவைக்காக சொன்ன விஷயம் பெரிதாக ஊதப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மீதுதானே தவிர அனுஷ்கா மீது எந்த கோபமும் கிடையாது.Anushka-1

இந்த விடயத்தில் அனுஷ்கா மீது எந்த ஒரு தவறும் கிடையாது. நான் கூறிய கருத்தால் அனுஷ்கா புண்பட்டு இருந்தால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் பரூக் இன்ஜினியர் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *