வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வரி..? அதிர்ச்சியளிக்கும் மத்திய அரசின் திட்டம்..

Image result for gold at home

இந்தியாவில் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருக்கும் தங்கத்தின் எடை சுமார் 24 ஆயிரம் டன் அளவிற்கு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 106 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Image result for gold at home

இந்தநிலையில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி விட்டதாக எண்ணும் மத்திய அரசு, இதன் காரணமாக வீட்டில் உள்ள தங்கத்திற்கு வரி விதிப்பது தொடர்பாக யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for gold at india

அதன்படி அதன்படி, தனிநபர் ஒருவர் ரசீது இல்லாமலும், கணக்கில் காட்டப்படாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்றும், இதற்கு 30 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related image

வீட்டில் வைத்துள்ள தங்கத்திற்கு வரி என்ற இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *