தோனி ஓய்வா..,சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி.!

Image result for dhoni speech"

தோனி ஓய்வு பெறுகிறார் என சமூகவலைத்தளங்களில் பரவிய செய்திகளால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்திய அணியின் ‘சீனியர்’ வீரர் தோனி 38. உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

Image result for dhoni"

இவர் ஓய்வு பெறப் போகிறார் என கடந்த செப்., மாதம் செய்திகள் வெளியாகின. இதை அவரது மனைவி சாக் ஷி மறுத்தார்.தற்போது தோனி ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி மீண்டும் ‘றெக்க’ கட்டி பறக்கத் துவங்கியுள்ளது.

இதுகுறித்து ‘தோனி ரிட்டயர்ஸ்’ என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’ உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Image result for dhoni speech"

ஓய்வு குறித்து தோனி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், இதுபோன்ற செய்திகளால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பின் இது உண்மையல்ல என தெரிந்ததும் ‘ரிலாக்ஸ்’ ஆகினர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *