ஏர் இந்தியாவை விற்க எப்டிஐ விதிகளை தளர்த்த திட்டம்..!

Image result for air india

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க ஏதுவாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை கவரும் வகையிலும் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) விதிகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related image

ஏர் இந்தியா நிறுவனம் ₹58,000 கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. இந்த நிறுவனத்தை மீட்கும் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து ஏர் இந்தியாவின் பெரும்பகுதி பங்குகளை தனியாருக்கு விற்று, நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், இதனை வாங்க யாரும் முன்வரவில்லை.

Image result for air india

இதை தொடர்ந்து, நூறு சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது விமான போக்குவரத்து துறையில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) மேற்கொள்ளலாம். ஆனால், பராமரிப்பு, பழுது நீக்குதல், விமானத்தை வாங்குதல் போன்றவற்றுக்குதான் சாத்தியம்.

Image result for air india

விமான நிறுவனத்தை சொந்தமாக்கி இயக்க வழியில்லை. இந்த தடையை நீக்கும் வகையில் எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *