டிராய் கொண்டுவரும் முக்கிய மாற்றம்.. ரிலையன்ஸ் ஜியோ கடும் விமர்சனம்..பாதிக்கப்படும் வாடிக்கையளர்கள்..

ஜியோ க்கான பட முடிவு

தொலை தோடர்பு நிறுவனங்களில் தற்போது கோளோச்சி நிற்பது ஜியோ, ஏர்டெல் போன்ற சில நிறுவனங்களே. இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் பொறுப்பு டிராய்-க்கு உள்ளது. அதன் அடிப்படையில் டிராய் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது வழக்கம், ஆனால் டிராய் கொண்டு வரும் இந்த மாற்றங்களை தற்போது ஜியோ கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அமைப்பான டிராய், தற்போது நடைமுறையில் இருக்கும் இலவச கால் சேவைகள் தொடர்பாக சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதையும் வரும் ஜனவரி 1 2020 முதல் அமலுக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது.

டிராய் க்கான பட முடிவு

இந்தப் புதிய மாற்றங்களை அமல்படுத்துவதால், தொலை தொடர்பு நிறுவனங்கள்  பிறநெட் வொர்க்குகளைத் தொடர்புகொள்வதை இனி இலவச சேவையாக வழங்க முடியாத நிலை உண்டாகும்.

இதன் விளைவாக தான் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவன நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் நிர்ணயித்து அறிவித்தது.

ஜியோ க்கான பட முடிவு

ஆனாலும், பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலான இணைப்புக்கு கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை டிராய் எடுத்திருப்பது மக்கள் விருப்பத்துக்கு மாறானது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையால், உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தி முன்னேறி கொண்டிருக்கையில் இந்தியா 2ஜி அளவிலே முடங்கிவிடும் சூழலை டிராயின் முடிவுகள் உருவாக்கும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை இது தகர்க்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அம்பானி மோடி க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *