ராஞ்சி டெஸ்ட்: ஒரே சதத்தில் இரண்டு வரலாற்று நிகழ்வுகள்.. தெறிக்கவிடும் இளம் வீரர்கள்.!

ராஞ்சி ரகானே க்கான பட முடிவு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் அஜின்கியா ரகானே சதமடித்தார். ரோகித் சர்மா 150 ரன்கள் எடுத்தார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

ராஞ்சி ரகானே க்கான பட முடிவு

மூன்றாவது டெஸ்ட் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (117), ரகானே (83) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியாவின் அஜின்கியா ரகானே சதமடித்தார். இது, டெஸ்ட் அரங்கில் இவரது 11வது சதம். தவிர இவர், சொந்த மண்ணில் 3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார்.

ராஞ்சி ராகனே க்கான பட முடிவு

கடைசியாக 2006ல் இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் அசத்திய ரோகித் சர்மா, 150 ரன் எடுத்தார்.முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (150), ரகானே (100) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *