36 ஆண்டுகளுக்கு பின்பு இலங்கைக்கு தமிழகம் செய்த செயல்.? அதிர்ச்சியில் மக்கள்.!

Image result for இலங்கை பிரதமர்இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான நிலையம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு ஏர் இந்தியாவின் அலைன்ஸ்ஏர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

பலாலி விமான தளம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *