ஆத்தாடி இம்புட்டு கோடியா.? வாய் பிளக்க வைக்கும் ‘கார்’ பரிசு.. இதை மட்டும் செய்தால் போதும்..

mumbai diamond car க்கான பட முடிவு

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 50 கோடி ரூபாய்க்கு வைரங்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு, வைரக் கற்கள் பதிக்கப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, மெர்சிடிஸ் பென்ஸ் கார், பரிசாக காத்திருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இரு தினங்களாக, ‘பாரத் வைர வாரம்’ என்ற கண்காட்சி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வைரக் கற்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டன.

விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சியில், 50 கோடி ரூபாய்க்கு வைரங்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதிக்கப்பட்ட, ‘மெர்சிடிஸ் – எஸ் கிளாஸ்’ கார், பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மொத்த மதிப்பு, 5 கோடி ரூபாய்.

‘ஒருவேளை, 50 கோடி ரூபாய்க்கு, யாரும் வைரங்கள் வாங்கவிட்டால், இந்த கார் ஏலத்தில் விடப்படும். இதில் கிடைக்கும் தொகை, மஹாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

diamond,car,வைரம்,ரூ.5 கோடி,கார்,பரிசு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *