அம்பானி கொடுத்த தீபாவளி பரிசு., அல்பமா ஆசைப்பட்டு அல்லல் படாதீங்க., ஜியோவின் புதிய.?

Image result for ஜியோமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், நற்செய்தி!! ஜியோ வழங்கும் 6 மாதங்களுக்கான இலவச 25 ஜிபி தினசரி டேட்டா, இந்த சலுகையை செயல்படுத்த இணைப்பை கிளிக் செய்து உடனே முன்பதிவு செய்யுங்கள் என்று கூறி,

சிறிய URL ஒன்றும் இணைக்கப்பட்டு குறுஞ்செய்தி ஒன்று மொபைல்போன்களுக்கு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குஷியான நிலையில், இந்த தகவல் பொய்யானது இது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வமாக இது போன்று எந்த ஒரு சலுகையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஜியோ சார்பில் ரூ.399 சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது என போலி செய்தி வெளியானதும் குறிப்பிடத்தக்கது. Image result for ஜியோ

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *