இந்தியா கிரிக்கெட் சரித்திரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் பெஸ்ட்- நீடா அம்பானி !

Related image

ஐ.பி.எல் தொடரில் மதிப்பு வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது என்று நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் “பிசினஸ் ஆப் ஸ்போர்ட்” என்னும் நிகழ்ச்சி, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நீடா அம்பானி பங்கேற்று உரையாற்றினார்.

நீடா அம்பானி உரையின் போது, எந்தவொரு இந்திய குழந்தைக்கும் விளையாட்டை கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதுமே தன் கனவு. உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிவித்தார்.

Image result for mumbai indians

மேலும் விளையாட்டில் இருந்து அனைவரும் ஓய்வு பெறும் வயதில், தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாக பொறுப்பை ஏற்றதாகவும், தற்போது இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த ஐபிஎல் அணியாக அது விளங்குவதாகவும் தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக நீடா அம்பானி உள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற பெறுமையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் என்பது குறிப்பிடதக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *