சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு

Image result for petrol india
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.76.61க்கும், டீசல் விலை ரூ.70.68க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.   பண்டிகை கொண்டாட்டங்களிடையே நேற்று 5வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு
அதேவேளையில், ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி தொடர் பண்டிகை கொண்டாட்டங்களை அடுத்து 6வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ரூ.76.43க்கும், டீசல் விலை 11 காசுகள் குறைந்து ரூ.70.57க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *