சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5வது நாளாக குறைந்தது

Image result for petrol india
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் நேற்று 4வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனையானது.  பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.74க்கும், டீசல் ரூ.70.81க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Image result for petrol india
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து ரூ.76.61க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலையும் 13 காசுகள் குறைந்து ரூ.70.68க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில், தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *