நள்ளிரவு வரை நடந்த உ.பி., சட்டசபை கூட்டம்

Image result for uttar pradesh parliament

மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, உத்தர பிரதேச சட்டசபையில், 36 மணி நேர சிறப்பு கூட்டம்,நள்ளிரவிலும் உற்சாகமாக நடந்தது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, 36 மணி நேர சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்தக் கூட்டத்தை, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இருப்பினும், ரேபரேலி தொகுதி காங்., பெண் எம்.எல்.ஏ.,வான அதிதி சிங், கூட்டத்தில் பங்கேற்றார்.நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு கூட்டம் துவங்கிது. நள்ளிரவையும் தாண்டி, நேற்றும் கூட்டம் நடந்தது. நேற்று நள்ளிரவுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.

மொத்தமுள்ள, 403, எல்.எல்.ஏ.,க்களில், பா.ஜ.,வுக்கு மட்டும், 301, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கூட்டம் தொடர்ந்தபோது, 100க்கும் மேற்பட்டோர் சபையில் இருந்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவில், சபை வளாகத்திலேயே, பல, எம்.எல்.ஏ.,க்கள் உறங்கினர். நேற்று அதிகாலையில், பலர் நடைப் பயற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.எம்.எல்.ஏ.,க்களைத் தவிர, 800க்கும் மேற்பட்ட போலீசார், 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சபை பாதுகாவலர்களும், பணியில் இருந்தனர். சபை வளாகத்தில் உள்ள, மூன்று கான்டீன்களும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான உணவு வகைகள் அளிக்கப்பட்டன.”ஜனநாயகத்தின் மீதோ, காந்தியின் கொள்கைகள் மீதோ பிடிப்பு இல்லாதவர்களே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை,” என, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *