திருமணத்திற்கு முன் ! ஆண்கள் ஏன் கட்டாயம் தொப்பையை குறைக்க வேண்டும் தெரியுமா?

Related image

தற்போது இருக்கும் காலகட்டத்தில், பல ஆண்கள் பெரிய தொப்பையுடன், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் இருக்கின்றனர்.  இப்படி ஆண்களுக்கு தொப்பை வருவதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. ஆண்களின் உடல் பருமன் அதிகரிப்பதற்கு உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மோசமான டயட் போன்றவை காரணங்களாக உள்ளன.   பெண்களை விட ஆண்கள் தான் பானைப் போன்று பெரிய தொப்பையைக் கொண்டிருக்கின்றனர். அந்த தொப்பையைக் குறைக்க முயலாவிட்டால், அதன் விளைவாக பல தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

Related image

உடல் பருமன் உள்ள பல ஆண்களும் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், அது மிகவும் ஆபத்தான பல இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
வேகமான இதய துடிப்பு மற்றும் மாரடைப்பு போன்றவற்றால் தான் தொப்பை உள்ள பல ஆண்கள் மரணத்தை சந்திக்கின்றனர். மன அழுத்தத்துடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து வந்தால், அதனால் திடீரென்று மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உடல் பருமனுடன், பெரிய தொப்பை கொண்ட ஆண்கள் பலர் அதிகம் பாதிக்கப்படும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். குறிப்பாக உடல் பருமன் உள்ள ஆண்களை புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தான் தாக்குகின்றன.

Image result for stomach belly boy

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் ஒருவர் இருந்தால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் தாக்கக்கூடும். அதுவும் டைப்-2 சர்க்கரை நோயால் தான் பாதிக்கப்பட நேரிடும்.
ஆண்கள் உடல் எடையைக் குறைக்காமல் இருந்தால், கல்லீரல் பிரச்சனைகளான கல்லீரல் வீக்கம் அல்லது கொழுப்பு கல்லீரல் போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, நெஞ்செரிச்சல் அல்லது அதிக அமில சுரப்பு போன்றவற்றால் கஷ்டப்படக்கூடும்.
ஆர்த்ரிடிஸ் உடல் பருமனுடன் இருக்கும் ஆண்கள் தசை மற்றும் மூட்டு பிரச்சனைகளுள், குறிப்பாக முழங்கால் பிரச்சனையால் பெரிதும் கஷ்டப்படுவார்கள். அதுவும் பல ஆண்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள்.
இதர பிரச்சனைகள் ஆண்கள் உடல் எடையைக் குறைக்காமல் தொப்பையுடன் இருந்தால், அதன் விளைவாக தூக்க கோளாறு, பித்தப்பை நோய் அல்லது பித்தக்கற்கள், கவனச் சிதறல் மற்றும் கற்பதில் சிரமம், மனநல பிரச்சனைகள் போன்றவற்றாலும் கஷ்டப்படக்கூடும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *