இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல்.., விஜய் சங்கர் நிகழ்த்திய செயல்..ஆனால்.?

Image result for vijay shankar in world cup

இந்தியன் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 2 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

ராகுல் சரியாக விளையாடாத காரணத்தால் டெஸ்ட் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சேர்க்கப்பட்டார்.

Image result for rohit sharma

ஆனால் பயிற்சி போட்டியில் ரோகித் டக் அவு ஆகா அதே வகையில் விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடக அணிக்காக விளையாடிய ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்தார்.

அதைப் போன்று தற்போது தமிழக அணி சார்பாக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடி 88 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அசத்தினார்.

 

ஏற்கனவே உலக கோப்பை தொடரில் நான்காவது இடத்தில் இறங்குவதற்கான வீரராக விஜய்சங்கர் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய விஜய் சங்கர் அடுத்து இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்தார்.

தற்போது அவர் மீண்டும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அடுத்த தொடரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது தெரிகிறது.

Image result for ஸ்ரேயாஸ் அய்யர்

ஏனெனில் அடுத்து வரும் தொடர்களில் ராகுல், விஜய்சங்கர், மணிஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற பல வீரர்கள் நான்காம் இடத்திற்கு கடும் போட்டியில் இருப்பதால் இந்திய அணி நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என்ற தலைவலி இந்திய அணி நிர்வாகத்திற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *