கடலை எண்ணெய்யில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா ? தொரிந்து கொள்ளுங்கள்.

Image result for ground nut oil
கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இந்த கடலை எண்ணெய் தான் சமையலில் அதிகம் பயன் படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும். கடலை எண்ணெய் தான் பொறித்து எடுக்க உகந்த எண்ணெய் ஆகும். இதன் கொதிநிளையானது 230 டிகிரியாகும் எனவே இது தான் பாதுகாப்பான சிறந்த எண்ணெய்.   கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது  அதிக அளவில் லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்

Image result for ground nut oil

ஒமேகா 6′ எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்த சமையல் எண்ணெய், கடலை எண்ணெய்  கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது. எனவே உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படுவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்புரிகிறது கடலை எண்ணெய். அனைவருமே முதுமை அடைவது என்பது தவிர்க்க முடியாத இயற்கையின் நீதி. ஆனால் சிலருக்கு எப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்க பேரார்வம் இருக்கும். கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தி செய்யட்டும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை தோற்றம் மேலோங்கும்.

Image result for ground nut oil

தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்த சத்து உடலில் குறைவதால் தலைமுடி வலுவிழந்து முடிகொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *