அரசு பள்ளிகளுக்கு இனி இந்த வகுப்புகள் நடத்தப்படும் – அமைச்சரின் புதிய கல்வி அறிவிப்பு..

அரசு பள்ளிகளில் நீதிபோதனை மற்றும் தற்காப்பு
அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் மற்றும் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் அடுத்த வாரத்திலிருந்து நீதி போதனை வகுப்புகளும், அடுத்த மாதம் முதல் தற்காப்பு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கருப்பணன், தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி முழுமையாக தடைசெய்யப்பட்டாலும் வடமாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவற்றையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் 75 சதவீதம் பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *