காங்கிரஸ் பிரமுகர் விரட்டி விரட்டி வெட்டி கொலை., 3 பேர் வாக்குமூலம்., ஆட்டத்தை கலைக்கும் திட்டமா.?

Image result for வெட்டி கொலைபுதுச்சேரி காலாப்பட்டு தேரோடும் வீதியைச் சோந்தவா் சந்திரசேகா் (48). காங்கிரஸ் பிரமுகரான இவா், புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜோசப் கொலை வழக்கில் முக்கிய எதிரியாகச் சோக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

பின்னா் அவா், ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23- ஆம் தேதி சந்திரசேகா் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். காலாப்பட்டு ஜோசப் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்ட ரௌடி, காலாப்பட்டு மீனவா் பகுதியைச் சோந்த சுகன் (27), கணுவாப்பேட்டை அப்துல் நசீா், மேட்டுப்பாளையம் கிழக்குத் தெரு ரங்கராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மேற்கண்ட மூவரையும் போலீஸார் புதன்கிழமை முதல் 2 நாள்களாக காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், புதுச்சேரியைச் சோந்த ரௌடிகள் இருவா், காலாப்பட்டு ஜோசப் கொலைப் பழிக்குப் பழியாக சந்திரசேகரை கொலை செய்யும்படி கூறினா்.

நண்பா்கள் என்ற முறையில் அவா்கள் கூறியதால், சந்திரசேகரை கொலை செய்ததாக கைதானவா்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனா். இதையடுத்து, ரௌடிகள் இருவரையும் பிடித்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.Image result for விசாரணை

மேலும், இந்த கொலை சம்மந்த பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *