கிரெடிட் கார்டு வைச்சு இருக்கீங்களா அப்போ உஷாராக இருங்க?

Related image

2016 நவம்பரில், கருப்பு பணம், போலி ரூபாய் நோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்தது. இதனால் புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாமல் ஆகிவிட்டது.

Image result for credit card

இதனால் பணப்புழக்கம் கடுமையாக பாதித்தது. இதனையடுத்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இருப்பினும் ரொக்கத்துக்கான தேவை கடுமையாக இருந்தது.

Image result for credit card

இதனையடுத்து மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்ற பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் இ-வாலட் வாயிலாக பெட்ரோல், டீசல் போடுபவர்களுக்கு சலுகை வழங்கும்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றம் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு மற்றும் இ-வாலட் வாயிலாக பணம் பரிவர்த்தனை செய்தால் 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கின.

Related image

சுமார் இரண்டரை ஆண்டுகளாக இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 0.75 தள்ளுபடி சலுகை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

Image result for petrol bunk in india

அதேசமயம், டெபிட் கார்டு மற்றும் இதர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்ட 0.75 சதவீதம் தள்ளுபடி வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *