பார்மில் இல்லாத ஷிகர் தவானுக்கு அணியில் புதிய பொருப்பு.!

 

Image result for ஷிகர் தவான்

இந்திய அணியில் நுழையும் இளம் வீரர்களுக்கு இதுவே சரியான தருணம் அடுத்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு இளம் வீரர்கள் தயாராக தற்போதைய இந்திய அணி நல்ல மேடையை அமைத்துக் கொடுக்கிறது என்று கூறுகிறார் ஷிகர் தவண்.

அவர் கூறும்போது, “வாஷிங்டன் சுந்தர் அருமையாக வீசுகிறார், நமக்கு விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கிறார். பேட்ஸ்மென்களை ரன் எடுக்கவிடாமல் முடக்குகிறார்.

அவர் பந்து வீச்சில் நல்ல கட்டுப்பாடும் உள்ளது பல வகையான பந்துகளையும் வீசுகிறார்.தீபக் சாஹர் இருவழிகளிலும் ஸ்விங் செய்கிறார், வேகமும் கூடியுள்ளது. இவர்கள் தற்போதிலிருந்து அனுபவம் பெற்று டி20 உலகக்கோப்பையை ஆடுவதற்கான சிறந்த களம் அமைந்துள்ளது.

மூத்த வீரர்களான நாங்கள் இளம் வீரர்களுக்கு உதவுகிறோம். ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் அய்யர் இறங்கும் போது அவர்களுடன் பேசி பதற்றமடையாமல் ஆடுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம்.

Image

ஒரு குறிப்பிட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களைச் சிந்திக்கச் செய்கிறோம். நான் பேட் செய்யும் போது கூட ரோஹித், கோலி ஆகியோருடன் பேசுவேன், அவர்களும் பேசுவார்கள், அதாவது களத்தில் கலந்துரையாடல் அவசியம்.இளம் வீரர்கள் எந்த ஒரு விஷயத்தைப் பேச விரும்பினாலும் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

இந்த மூத்த வீரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று இளம் வீரர்கள் கூறாமல் இருந்தால் சரி. ஷிகர் தவண் முதலில் தன் சொந்த பேட்டிங்கின் குறைபாடுகளை களைந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், இந்திய அணியில் நிறைய ஆலோசகர்கள் பெருகிவிட்டார்கள், ஆலோசனை வழங்கத்தான் ரவிசாஸ்திரி, விக்ரம் ராத்தோர் இன்னும் எண்ணற்ற உதவிக்குழுக்கள் இருக்கின்றனரே.

 

Image

மூத்த வீரர்கள் தங்கள் பேட்டிங் சீரான முறையில் ரன் எடுக்குமாறு இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *