டி20 தொடர் மூன்றாவது போட்டி தெ.ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்த்து.!

 

Image

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோன்று தென்ஆப்பிரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ரோஹித் சர்மா, தவான் துவக்கம் அளித்தனர். முதல் போட்டி போலவே ரோஹித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தார். 9 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா, பேரான் ஹென்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

Image

ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். தவான் அதிரடியாக விளையாடினாலும், விராட் கோலி ரன்கள் சேர்க்க திணறினார். தவான் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் குவித்தார். தவான் ஆட்டமிழக்கும் போது இந்தியா 7.2 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருந்தது.

தவான் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 15 பந்தில் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்தியாவின் ஸ்கோர் அப்படியே தவழ ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 ரன்னிலும், குருணால் பாண்டியா 4 ரன்னிலும் வெளியேறினார்.Image

ஜடேஜா 17 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

Image

இந்நிலையில் டி 20 மூன்றாவது தொடரை(SA 140/1 (16.5) தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

 

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *