உங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஒரு பழத்தின் ஜூஸ் போதும் !

Image result for தக்காளி ஜூஸ்

தக்காளியில் பல வகைகள் உண்டு அவைகள்  மாட்டுத்தக்காளி, சீமைத்தக்காளி, மணத்தக்காளி, நாட்டுத் தக்காளி என்று பல வகையான தக்காளிகள் உண்டு.பெரும்பாலும் நாட்டுத் தக்காளியைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

நவீன உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இது உணவுகளுக்கு ருசியையும், நறுமணத்தையும் கொடுக்கிறது.விலையுயர்ந்த கனிகளை வாங்க இயலாதவர்கள், இக்கனியை தினசரி அப்படியே சாப்பிட்டு வந்தாலே போதும் நமது தேகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பழத்தில், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.

Image result for தக்காளி ஜூஸ்

தக்காளி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தம் மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தக்காளியில் உள்ள சல்பர் மற்றும் குளோரின் கல்லீரல், சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஊக்குவித்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

தக்காளி பழச்சாறு நம் உடலிற்கு போதுமான ஈரப்பதத்தை அளித்து, செரிமான குழாயில் உணவுகள் சிக்குவதை தடுத்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

Image result for தக்காளி ஜூஸ்

தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன.

நன்கு பழுத்த தக்காளி இரண்டு எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.தக்காளியை சாப்பிட பிடிக்காதவர்கள் அதை ஜூஸ் போட்டு குடிக்கலாம் ,

 

Image result for தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ் செய்முறை : தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி 4 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும்.

இத்துடன் 2 கப் தண்ணீர், தேன், லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சுவையான சத்தான தக்காளி ஜூஸ் ரெடி.

Image result for தக்காளி ஜூஸ்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *