கடவுள் கொடுத்த அற்புத கனி ! இவ்வளவு பயன்களை கொண்டுள்ளதா ?

Image result for lemon juice

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. சில சமயம், அது அழகுக் கலையிலும் வெகுவாகப் பயன்பட்டு வருகிறது.

மருந்து என்று சொல்லும் போது, அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது தான் முக்கியமான விஷயம். ஒரு முழு எலுமிச்சை பழத்தை சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் அது தரும் எனர்ஜியே தனி

Image result for lemon juice

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

Image result for lemon juice

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த பயன், இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை சாறு நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து பருகிவர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குறிப்பாக எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டும் இல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு காண இயலும்.

Image result for lemon juice

எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும், சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.

Image result for lemon juice

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *