பக்தர்கள் கவணத்திற்கு: திருப்பதியில் அதிரடி அறிவிப்பு..இனி இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.!

தொடர்புடைய படம்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க பழைய வாகனங்களில் திருப்பதி செல்வதற்கு தடை விதித்து தேவஸ்தானம் போர்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசத்தி பெற்ற கோவிலாகும். நாடு முழுவதுமிருந்து பல கோடி கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தொடர்புடைய படம்

விடுமுறை நாட்கள் மற்றும் வாரஇறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பலர் சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனத்தில் வருகின்றனர்.

திருப்பதிக்கு வாகனத்தில் வரும் பக்தர்கள் மலைப்பாதையில் செல்லும் போது பழைய வாகனத்தில் இருந்து புகையினால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர்க்கும்விதமாக 2003-ம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்களில் திருமலைக்கு வருவதற்கு தடை விதித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளதால் திருப்பதி வரும் பக்தர்கள் 2003 ஆண்டிற்கு முந்தைய வாகனங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

thirupathi hills க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *