ரக்‌ஷாபந்தன் பற்றிய வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் தெரியுமா?

Related image

பல்வேறு முக்கிய பண்டிகைகளில் ரக்‌ஷா பந்தன் தினமும் ஒன்றாகிவிட்டது. தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மற்ற பண்டிகைகளை விட ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கிய பண்டிகையாக, தினமாக மாறி உள்ளது.

இந்த ரக்‌ஷா பந்தன் தினத்தில் ஒரு பெண் தான் சகோதரனுக்கும், சகோதரனாக என்னும் நபர்களுக்கு ராக்கி கட்டுவது வழக்கம். அப்போது சகோதரியின் அன்பில் பூரித்து அவருக்கு பரிசு பொருட்கள் வழங்குவதும் உண்டு. அப்படிப் பட்ட புனிதமான நாள் எப்படி தோன்றியது என புராண கதைகள், வரலாற்றுக் கதைகள் சில உள்ளன. அவற்றில் சில இங்கு பார்ப்போம்.மகாபாரதத்தில் பகவான் விஷ்ணு போரின் போது காயம் அடைந்தார். அவரின் கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி, தான் உடுத்தியிருந்த சேலையின் ஒரு பகுதியை கிழித்து, அதை கிருஷ்ணரின் காயமடைந்த பகுதியில் கட்டினார்.

Image result for ரக்‌ஷா பந்தன்
இதனால் நெகிழ்ந்து போனார் கிருஷ்ணர். பாஞ்சாலியை தங்கையாக ஏற்றுக் கொண்ட கிருஷ்ண பகவான், பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று, திரெளபதியை துகிலுரிய முயன்ற போது, அவரின் மானத்தை காப்பாற்றினார். அப்படி திரெளபதி தன் சேலையை கிழித்து கட்டிய நிகழ்வை தற்போது ரக்‌ஷா பந்தனாக கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆண்டு வந்தார். அப்போது குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற எண்ணி அதன் மீது போர் தொடுத்தார். அப்போது தன் நாட்டை காப்பாற்ற, கர்ணாவதி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ஒரு புனித நூல் அனுப்பி உதவியை கோரினார். பாச உணர்ச்சி கொண்ட ஹுமாயுன் கர்ணாவதிக்கு உதவ முற்பட்டார். ஆனால் பகதூர் ஷா அதற்கு முன்னர் ராணியை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்.

மேலும் பெளர்ணமி திதியில் கடைப்பிடிக்கப்படும் இந்த தினம், பெளர்ணமி திதியில் ராக்கி கட்டுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. பெளர்ணமி திதி தொடங்கும் நேரம்: 14ம் தேதி மாலை 3.45 மணி முதல்  பூர்ணிமா திதி முடியும் நேரம்: 15ம் தேதி மாலை 05:58 மணி வர ,வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த சகோதரத்துவத்தை உணர்த்தும் தினம், இங்கும் கொண்டாடப்பட்டால் சிறப்பு தான்.

Related image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *