பொங்கலை ஃபிரைடு ரைஸ் போல சமைத்த கஸ்தூரி- கோஞ்சமா நஞ்சமா திட்டி தீர்த்த சாண்டி!

சக்கரப் பொங்கலை ஃபிரைடு ரைஸ் போல சமைத்த கஸ்தூரி –  திட்டி தீர்த்த  சாண்டி..!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்குகளில் பங்கெடுத்தனர். அதிலும் குறிப்பாக கஸ்தூரி சமைத்த சக்கரைப் பொங்கலால் பிக்பாஸ் வீடே சிரிப்பொலியில் அதி்ர்ந்தது.

பிக்பாஸ் வீட்டின் இன்றையப் பொழுது ’சென்னை டா’ பாடலுடன் துள்ளலாக தொடங்கியது. புதிய போட்டியாளராக் வீட்டுக்குள் பிரவேசித்துள்ள கஸ்தூரி ஹவுஸ்மேட்ஸ் குறித்த மொத்த கதையையும் வில்லுப் பாட்டாக பாடினார்.

பல்வேறு எபிசோடுகள் கடந்து தீர்வு காணப்பட்ட கவின் – சாக்‌ஷி – லோஸ்லியா ஆகியோரின் முக்கோண காதல் விவகாரத்தை மீண்டும் தூசி தட்டி எழுப்பினார்.

பிறகு, இந்த வார தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் தொடங்கியது. அதில் சிறப்பாக விளையாடி சேரன், லோஸ்லியாவை வீழ்த்தி சாண்டி இந்த வார பிக்பாஸ் வீட்டுக்கான தலைவராக தேர்வானார். அவர் பதவியேற்ற போது போட்டியாளர்கள் அனைவரும் சந்திப்புக் கூட சோபாவில் இருந்த தலையணைகளால் அடித்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து பொங்கல் செய்யும் டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு மதுமிதா நடுவராக நியமிக்கப்பட்டார். சாண்டி, ஷெரீன், தர்ஷன், கவன், முகின் உள்ளிட்டோர் ஒரு அணியில் இருந்தனர். கஸ்தூரி, சேரன், லோஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி உள்ளிட்டோர் மற்ற அணியில் இடம்பெற்றனர்.

இதில் சாண்டி, ஷெரீன், தர்ஷன் ஆகியோர் சமைத்த பொங்கல் பரிசு பெற்றது. இதற்காக அவர்களுக்கு மைசூர் பா சன்மானமாக வழங்கப்பட்டது. வென்ற அணியினருக்கு மதுமிதா தான் பொங்கல் சமைக்க சொல்லி கொடுத்தார் என சேரனும், கஸ்தூரியும் பிரச்னையை கூட்டினர். இதில் கஸ்தூரிக்கு பொங்கல் சமைக்க தெரியாது என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  அடுத்ததாக ரோல் தி பாட்டில் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் பலரும் மற்ற போட்டியாளர்களும் குறித்தும் தங்களை பற்றியும் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்தனர். அது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *