இனி வருடம் முழுவதும் வேலிடிட்டி கொண்ட பி.எஸ்.என்.எல்.லின் புதிய சலுகை அறிமுகம்..

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,188 விலையில் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,188 மதுரம் பிரீபெயிட் வவுச்சர் என அழைக்கப்படும் புதிய சலுகை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ் நாடு வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

புதிய சலுகை ஜூலை 25 ஆம் தேதி துவங்கி 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு டேட்டா பலன்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 1,399 மற்றும் ரூ. 1001 விலையில் இரு பிரீபெயிட் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்தது. எனினும், இவை ஆந்திர பிரதேசம், தெலுங்கானாவில் மட்டும் அறிவிக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். ரூ. 1,188 மருதம் சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் மொத்தம் 1200 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

 

சமீபத்தில் பி.எஸ்.என்.எல். ரூ. 1,399 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 50 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 270 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 1001 விலை சலுகையில் 9 ஜி.பி. டேட்டா, 270 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 270 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய சலுகை தற்சமயம் தமிழ் நாட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், ஒரு எம்.பி. டேட்டாவுக்கு 25 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இச்சலுகை நாட்டின் மற்ற டெலிகாம் வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

இரு சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. எனினும், வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது. இரு சலுகைகளும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுஙகானாவில் அக்டோபர் 22 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *