பகலை காட்டிலும் இரவில் இது ரொம்ப அவசியம் ….! இதோ உங்களுக்கான டிப்ஸ் …..

Related image

உடல் உறுப்புகளில் மிக சிறந்த அங்கமாக விளங்குவது கண்கள். உலகின் பேரழகை உள்ளத்தில் வைத்து ரசிக்க, கண்கள் இருந்தால் மட்டுமே முடியும்.
உள்ளத்தின் உணர்வுகள், நவரசங்களை விழிகள் வழியாக வெளிப்படுத்த முடியும். அதனால் கண்கள் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முதன்மையானதாக விளங்குகிறது.

கண்களில் சிறு பிரச்னை என்றால் கூட, உடனே கவனிக்க வேண்டும். இந்த கண்களை பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது நம் நல்வாழ்வுக்கு மிக முக்கியம். கண்கள் புத்துணர்வோடு இருந்தால்தான், நாமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியும்

Image result for a girl with beautiful eyes

தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்வதோடு, எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனையால் பலரும் கண்ணாடியை அணிகின்றனர். கண்ணாடி அணிவது பார்க்க ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் தினமும் கண்ணாடி அணிபவர்களுக்குத் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் என்று தெரியும்…..சரி இப்பொழுது கண்களை எப்படி பரமரிப்பது எப்படி என்று பார்க்கலாம் ….

பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.

Related image

பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.

கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.

கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும்.

முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்

கண்ணில் உள்ள விழி வெண் படலம் , விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த கேரட், முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.

Image result for a girl with beautiful eyes

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *