பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் , சரும பிரச்சனைகளை சமாளிக்க எளிய டிப்ஸ் .!

Image result for beauty tips for mens

நாம் அனைவருக்குமே அழகான, ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இப்படியொரு சருமத்தைப் பெற வேண்டுமானால், நிறைய பணம் செலவழித்து, சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அது தான் இல்லை. ஒருவர் அழகாக ஜொலிக்க நினைத்தால், அதற்கு வீட்டில் உள்ள பொருட்களே பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆம், நம் வீட்டிலேயே சருமத்தை அழகாக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நிறைய பொருட்கள் உள்ளன. குறிப்பாக அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளே நம் அழகை மேம்படுத்தும்.

சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள் இல்லாதது.

Image result for தேங்காய் எண்ணெய்

சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வரலாம். மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில் சதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில் தடவி வரலாம்.

சருமத்திற்கு அடுத்தப்படியாக உதடுகள் தான் அதிகம் வறட்சியடையும். உதடுகள் வறட்சியுடன் இருந்தால், அது தோற்றத்தை அசிங்கமாக வெளிக்காட்டும். எனவே தினமும் உதட்டிற்கு தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள்.
Image result for வல்லாரை

வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.

Image result for குடசப்பாலை

வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தாலும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.

பெரும்பாலான தோல் நிபுணர்கள் மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர். சுடுநீரில் குளிப்பதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக வெளியேறி, சரும வறட்சி அதிகரிக்கும். வேண்டுமானால் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் இயற்கையாகவே சிலருக்கு வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். பருக்கள் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்சனை வரலாம். இந்த வறட்சியைத் தடுக்கக் குளித்து முடித்தவுடன் மாயிச்சரைஸர் போட்டுக் கொள்ளலாம். அதிகம் பயன்படுத்தினால் வியர்க்குரு வரும் வாய்ப்பு உண்டு என்பதையும் மறக்கக் கூடாது.

Image result for வெதுவெதுப்பான நீரில்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *