இனி பிஸ்கெட் நொறுக்கு தீனி அல்ல! அரசு திட்டவட்டம்!

Related image

சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடர்பான கூட்டங்களில் இனி பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் வழங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image result for பிஸ்கட்
சுகாதாரத்துறை அமைச்சகம் ஜூன் 19 ம் தேதி விடுத்துள்ள சுற்றறிக்கையில், அமைச்சக கூட்டங்களில் குக்கீஸ், பிஸ்கெட் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள் வழங்கக் கூடாது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதில் ஆரோக்கியம் தரும் வகையிலான உலர் பழங்கள், கொண்டைக்கடலை, நட்ஸ் உள்ளிட்ட உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image result for பிஸ்கட்

இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சக அதிகாரிகள், இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு டாக்டர் என்பதால் துரித உணவுகள் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் எந்த மாதிரியான உடல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிவார்.

அதனால் தான் அவர் இது போன்றதொரு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். நாங்கள் உட்பட அமைச்சகத்தின் அனைத்து ஊழியர்களும் இதனை வரவேற்றுள்ளனர் என்றார்.

Image result for பிஸ்கட்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *