‘ஏ’மற்றும் ‘பி’பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாத சம்பளமே இல்லை – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.
இதனையடுத்து இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட், ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் சம்பளம் கிடையாது என்றும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பிறகு ஜூன் மாதம் சம்பளம் ஜூலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ‘ஏ’ பிரிவில் 1 லட்சம் பேரும், ‘பி’ பிரிவில் சுமார் 3 லட்சம் ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ஜூன் மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

‘ஏ’ மற்றும் ‘பி’ ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது ஊழியர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *