விரைவில் சட்டசபை கூட்டம்: தயாராகும் அமைச்சர்கள்

Related image

சட்டசபை மானிய கோரிக்கைக்கு, அனைத்து அமைச்சர்களும், தயாராகி வருகின்றனர். துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்பு தயாரிப்பு பணி துவங்கி உள்ளது.

Related image
தமிழக சட்டசபையில், 2019 – 20க்கான பட்ஜெட், பிப்., 8ல் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், லோக்சபா தேர்தலையொட்டி, துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடத்தப்படவில்லை. லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், ராஜ்யசபா தேர்தல் வர உள்ளது.
Image result for tamilaga arasu
இந்நிலையில், அடுத்த மாதம், சட்டசபை கூட்டத் தொடரை நடத்த, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்பு தயார் செய்ய, அமைச்சர்கள், துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று, வருவாய் துறை, உயர் கல்வித் துறைகள் சார்பில், ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன.

கூட்டத்திற்கு, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் ஆகியோர், தலைமை வகித்தனர். கூட்டத்தில், கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற வேண்டிய விஷயங்கள், துறை ரீதியில் புதிதாக வெளியிட வேண்டிய அறிவிப்புகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *