இன்றைய நாள் உங்களுக்கானது.., இன்றைய ராசிபலன்

Image result for best astrologyராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

எதையும் சமாளிக்கும் திறமையும், சாமர்த்தியமும் மேம்படும். தனவரவு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் புதிய சூழலை உருவாக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பயணங்களால் லாபம் உண்டாகும். எதிர்பாராத புதிய சந்திப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்

மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். பணிகளில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தோற்றப்பொழிவு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். எதிர்பார்த்த செய்திகள் காலதாமதமாகும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் பிறக்கும். சக ஊழியர்களால் ஆதாயமான சூழல் உண்டாகும். சுபச் செலவினங்கள் அதிகரிக்கும்.

கடகம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். கவலைகள் குறைந்து உற்சாகமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் நினைத்த பலனை அளிக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட ஒப்பந்தம் கிடைக்கும்.

சிம்மம்

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சனைகளில் நல்ல தீர்வுகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். உறவினர் வருகையினால் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது.

துலாம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிக்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் காலதாமதமான பலனை அளிக்கும்.

விருச்சகம்

பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த மாறுதல் உண்டாகும்.

தனுசு

வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் இன்ப சுற்றுலாக்கள் சென்று வருவீர்கள்.

மகரம்

தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் அமைதியாக செயல்படவும். ஆலய தரிசனம் செய்வது மனதில் அமைதியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் மறதியால் அவ்வப்போது பிரச்சனை வந்து நீங்கும்.

கும்பம்

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தொழில் சார்ந்த எதிர்ப்புகள் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மீனம்

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் சிக்கல்களை தவிர்க்கலாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். பூர்வீக சொத்துப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *