வோடாபோனின் Rs.599 திட்டத்தில் -அதிரடி சலுகை !!! விட்ட இடத்தை பிடிக்குமா வோடபோன் ?

Image result for vodafone sim

வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.599-திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி,  ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை 180 நாட்களுக்கு அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில் 6ஜிபி டேட்டாவையும் 180நாட்கள் பயன்படுத்தும் வகையில் அறிவித்துள்ளது அந்நிறுவனம் .

Image result for வோடாபோனின் Rs.599 திட்டத்தில்

 

மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு  அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம் :

 

வோடபோன் ரூ.299 ப்ரீபெய்ட் :

வோடபோன் அறிமுகம் செய்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Image result for வோடாபோனின் Rs.599 திட்டத்தில்

வோடபோன் ரூ.129 ப்ரீபெய்ட் :

வோடபோனின் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.209 ப்ரீபெய்ட் :

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்

வோடபோன் ரூ.351 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித
கட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டா பலன்களும்வழங்கப்படவில்லை என்பதால்,
டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for வோடாபோனின் Rs.599 திட்டத்தில்

வோடபோன் ரூ.479 ப்ரீபெய்ட் :

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

தொடர்ந்து வோடபோன் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது , இதன் மூலம் விட்ட இடத்தை பிக்குமா என்பது கேள்வி குறியாக உள்ளது .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *