இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் !! சென்னையை வீழ்த்தி அபாரம்

Image result for csk vs mi

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Image result for csk vs mi
வாட்ஸன் உள்பட முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல், மூன்று கேட்சுகள் மிஸ் செய்தது ஆகியவையே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. மும்பை அணியின் சூர்யகுமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு வந்த ஒரு கேட்சை முரளிவிஜய் மிஸ் செய்தார். அதன்பின் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் அடித்தார். அதேபோல் வாட்ஸன் நேற்று இரண்டு கேட்சுகளை மிஸ் செய்தார்.
ஸ்கோர் விபரம்:

சென்னை அணி: 131/4
20 ஓவர்கள் 
ராயுடு: 42
தோனி: 37
முரளி விஜய்: 26
மும்பை அணி: 132/4 18.3 ஓவர்கள் சூர்யகுமார் யாதவ்: 71
இஷான் கிஷான்: 28
ஹர்திக் பாண்ட்யா: 13
ஆட்டநாயகன்: சூர்யகுமார் யாதவ்
இன்றைய போட்டி: டெல்லி மற்றும் ஐதராபாத்

 

Related image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *